search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பாகிஸ்தான் பயங்கரவாதிகள்"

    பாகிஸ்தானில் பயங்கரவாத இயக்கங்கள் செயல்படுவது உண்மை என்று கூறிய பிரதமர் இம்ரான் கான் கருத்துக்கு கண்டனம் எழுந்துள்ளது. #Imrankhan
    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் 2 நாள் அரசுமுறை பயணமாக ஈரான் சென்று இருந்தார். அப்போது தெக்ரானில் ஈரான் அதிபர் ஹசன் ரக்கானியுடன் கூட்டாக பேட்டி அளித்தார்.

    அப்போது, “பாகிஸ்தானில் செயல்படும் பயங்கரவாத அமைப்புகளால் ஈரான் மிகவும் பாதிக்கப்படுவதை நான் அறிவேன். பயங்கரவாத அமைப்புகள் செயல்படுவதை ஈரானும், பாகிஸ்தானும் விரும்பவில்லை. அதில் உறுதியாகவும், நம்பிக்கையுடனும் இருக்கிறோம்.

    இரு நாடுகளிடையே நல்ல நிலையும், நட்பையும் உருவாக்கும் என நம்புகிறோம்” என்றார். இவரது இக்கருத்துக்கு பாகிஸ்தான் எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.

    பாகிஸ்தான் முஸ்லிம் லீக்-நவாஸ் கட்சி தலைவர் குர்ரம் தஸ்தகீர் கூறும்போது, “பாகிஸ்தானில் பயங்கரவாத இயக்கங்கள் செயல்படுவதாக பிரதமர் கூறியிருப்பது முதன் முறையாக நாட்டின் பாதுகாப்புக்கு எதிரானது.

    வெளிநாட்டு மண்ணில் இருந்து கொண்டு இத்தகைய ஒப்புதல் வாக்குமூலத்தை இதுவரை எந்த பிரதமரும் அளித்தது இல்லை. இந்த அறிக்கை மூலம் பிரதமர் இம்ரான்கான் ராஜ்ய ரீதியிலான மிகப்பெரிய தவறை செய்துவிட்டார். நாட்டின் பாதுகாப்புக்கு ஊறு இழைத்துவிட்டார். இதற்குமுன்பு இந்திய பாராளுமன்ற தேர்தலில் வெற்றிபெற்று மோடி பிரதமரானால் தான் காஷ்மீர் பிரச்சனையை தீர்க்க முடியும் என முரண்பாடான கருத்து கூறினார்” என்றார்.

    முன்னாள் வெளியுறவு மந்திரியும், பாகிஸ்தான் மக்கள் கட்சியின் எம்.பி.யுமான ஹினா ரப்பானி கூறும்போது, ‘இம்ரான்கான் இதுபோன்று கேலிக்கூத்தான கருத்துக்களை தொடர்ந்து கூறுவதால் நாட்டை பற்றிய எங்களின் கவலை அதிகரித்துள்ளது’ என்றார். #Imrankhan
    காஷ்மீர் எல்லைப்பகுதியில் பாகிஸ்தானின் எப்-16 ரக போர் விமானத்தை நமது விமானப்படை சுட்டு வீழ்த்தியதற்கு ஆதாரமான ரேடார் பதிவுகளை இந்தியா இன்று வெளியிட்டது. #PakistanF16 #IndianAirForce #IAFMIG21 #MIG21Bison
    புதுடெல்லி:

    பாகிஸ்தான் எல்லைப்பகுதியான பாலகோட்டில் இந்திய விமானப்படை பயங்கரவாத முகாம்களை அழித்த பின்னர் பிப்ரவரி 27-ம் தேதி இந்திய விமானப்படை மற்றும் பாகிஸ்தான் விமானப்படை இடையே மோதல் ஏற்பட்டது. 

    அப்போது பாகிஸ்தானின் எப்-16 விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதாக இந்திய விமானப்படை தெரிவித்தது. அந்த விமானத்தில் பயன்படுத்தப்பட்ட அம்ரான் ஏவுகணையின் சிதைந்த பாகங்களையும் இந்தியா வெளியிட்டது. ஆனால், இதை பாகிஸ்தான் மறுத்தது. 

    நாங்கள் சுட்டு வீழ்த்தியது எப்-16 ரக போர் விமானம்தான் என்பதை உறுதியாக கூறிய இந்தியா, அமெரிக்காவிற்கும் ஆதாரங்களை அனுப்பி வைத்தது. எப்-16  ரக போர் விமானத்தை உள்நாட்டு பயங்கரவாதிகளுக்கு எதிராக மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்றும், மற்ற நாடுகள் மீதான தாக்குதலுக்கு பயன்படுத்தக்கூடாது என்ற ஒப்பந்தத்தின்படி அமெரிக்கா பாகிஸ்தானுக்கு வழங்கியது. ஆனால், பாகிஸ்தான் ஒப்பந்த விதிகளை மீறியது என இந்தியா தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது. 

    இதற்கிடையில், அமெரிக்காவில் இருந்து வெளியாகும் “ஃபாரின் பாலிசி” என்ற செய்தி இதழ், அமெரிக்காவின் பாதுகாப்பு அதிகாரிகள் சமீபத்தில் பாகிஸ்தானிடம் எத்தனை எப்-16 ரக விமானங்கள் உள்ளது? என்பதை எண்ணி பார்த்ததாகவும், இதில், அமெரிக்காவால் வழங்கப்பட்ட விமானங்களின் எண்ணிக்கையில் எதுவும் குறையவில்லை என செய்தி வெளியிட்டது. 

    இதற்கு இந்திய விமானப்படை மறுப்பு தெரிவித்திருந்தது. “இருதரப்பு வான்மோதலின்போது இந்திய விமானப்படையின் மிக் 21 பைசன் ரக விமானம், பாகிஸ்தானின் எப்-16 விமானத்தை நவ்ஷேரா செக்டாரில் சுட்டு வீழ்த்தியது,” என இந்திய விமானப்படை ஆணித்தரமாக கூறியுள்ளது. 

    மேலும், பாகிஸ்தான் விமானப்படையின் ரேடியோ தகவல் தொடர்பை இடைமறிப்பு செய்ததில் அந்நாட்டின் எப். 16 விமானம் ஒன்று பாகிஸ்தானில் உள்ள நிலைக்கு திரும்பவில்லை என்று பாகிஸ்தான் விமானப்படை தகவல் தொடர்புத்துறை உயரதிகாரி மைக் மூலம் தெரிவித்த கருத்தும் இதை உறுதிப்படுத்துவதாக இந்தியா சார்பில் தெரிவிக்கப்பட்டது. 

    இந்நிலையில், இந்தியாவின் கருத்துக்கு வலு சேர்க்கும் புதிய ஆதாரத்தை இந்திய விமானப்படையின் துணை தளபதி ஆர்.ஜி.கே.கபூர் இன்று வெளியிட்டுள்ளார்.

    பாகிஸ்தானின் எப்-16 ரக போர் விமானத்தை நமது விமானப்படை சுட்டு வீழ்த்திய ரேடார் பதிவுகளை செய்தியாளர்களுக்கு துணை தளபதி ஆர்.ஜி.கே.கபூர் காட்சிப்படுத்தினார். இதைவிட அதிக வலுவான ஆதாரம் எங்களிடம் உள்ளது. ஆனால், பாதுகாப்பு மற்றும் நாட்டின் அதிமுக்கிய ரகசியம் என்னும் வகையில் அந்த ஆதாரத்தை பொதுவெளியில் (ஊடகங்களுக்கு) பகிரங்கமாக தெரிவிக்க முடியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். #PakistanF16 #IndianAirForce #IAFMIG21 #MIG21Bison 
    நானும் காவலாளி நிகழ்ச்சி மூலம் பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் இருந்தவாறு நாட்டின் 500 பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள பிரமாண்ட திரைகள் வழியாக மக்களுடன் கலந்துரையாடி வருகிறார். #PMModi #Chowkidar #MainBhiChowkidar #MainBhiChowkidarprogra
    புதுடெல்லி:

    டுவிட்டர் மூலம் பிரபலமான ‘மைபி சவுக்கிதார்’ (நானும் ஒரு காவலாளி) என்ற அடைமொழியை வீடியோ பிரசாரமாக முன்னெடுத்துச் செல்ல பிரதமர் மோடி திட்டமிட்டுள்ளார்.

    அவ்வகையில், முதல்கட்டமாக  நாடு முழுவதும் உள்ள 500 பகுதிகளில் பா.ஜ.க. தொண்டர்கள் மற்றும் பொது மக்களிடையே வீடியோ கான்பிரன்ஸ் மூலம் பிரதமர் மோடி கலந்துரையாட உள்ளார் என பா.ஜ.க. தெரிவித்திருந்தது.

    இந்நிலையில், இன்று மாலை 5 மணியளவில் டெல்லியில் உள்ள டல்லகோட்டா அரங்கத்தில் பிரதமர் மோடி தனது பேச்சை தொடங்கினார். இந்த அரங்கத்தில் மட்டும் சுமார் 5 ஆயிரம் பேர் திரண்டு மோடி உரையாற்றுவதை கவனித்து வருகின்றனர். இதேபோல் நாட்டின் 500 பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள பிரமாண்ட திரைகள் மூலமாக பல லட்சம் மக்கள் அவர் பேசுவதை பார்க்கின்றனர்.

    இன்றைய நிகழ்ச்சியில் பேசிய மோடி, ‘என்னைப் பொருத்தவரை சவுக்கிதார் (காவலாளி) என்ற வார்த்தையை மகாத்மா காந்தியின் நம்பிக்கை என்ற வார்த்தையின் அடையாளமாக பார்க்கிறேன்.

    இந்த நாட்டுக்கு இனி ராஜாக்களும், மகாராஜாக்களும் தேவையில்லை என்பதை உணர்த்தும் வகையில்
    சவுக்கிதார் என்னும் சொல் மிகப்பெரிய அளவில் எட்டப்பட்டிருப்பதை அறிந்து நான் மட்டற்ற மகிழ்ச்சியடைகிறேன்’ என்று குறிப்பிட்டார்.

    நமது நாட்டின் படைகள் மீது எனக்கு அபாரமான நம்பிக்கை உண்டு. அவர்களின் திறமை, ஒழுக்கம் மற்றும் ஆற்றலை நான் மிகவும் நம்புகிறேன். 

    கடந்த 40 ஆண்டுகளாக பயங்கரவாதத்தின் தீமைகளால் நாம் அவதிப்பட்டு வந்தோம். இதற்கு யார் காரணம் என்று நாம் தெரிந்து வைத்திருந்தோம். இது இப்படியே நீடிக்கத்தான் வேண்டுமா? என்று நான் யோசித்தேன். இந்த பயங்கரவாத விளையாட்டு எங்கிருந்து இயக்கப்படுகிறதோ, அங்கேயே (பாகிஸ்தான் எல்லைப்பகுதி) போய் நாம் விளையாட வேண்டும் என்று தீர்மானித்தேன்.

    இதனால் பாகிஸ்தான் விழிபிதுங்கி நிற்கிறது. எல்லைப்பகுதிக்குள் புகுந்து பாலகோட்டில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது நாம் நடத்திய தாக்குதலால், ஆமாம் அந்த பகுதியில் பயங்கரவாத முகாம்கள் இயங்கி வந்தன என்று அவர்கள் ஒப்புக்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

    ஆனால், அதற்கு முன்னர் எல்லைப்பகுதியில் அப்படி எல்லாம் ஒன்றுமில்லை என்று பாகிஸ்தான் தொடர்ந்து கூறிவந்தது. பயங்கரவாதிகள் வேறெங்கும் பதுங்க முடியாதவாறு நமது தாக்குதல் அமைந்திருந்தது. தாக்குதல் நடந்த பகுதிக்குள் கடந்த ஒன்றரை மாதமாக பாகிஸ்தான் அரசு யாரையும் இதுவரை நுழைய விடவில்லை.

    நாம் நடத்திய விமானப்படை தாக்குதலுக்கு பிறகு தங்கள் நாட்டின் வான் எல்லையை மூடிவிட்ட பாகிஸ்தான், இப்போது மோடி தேர்தல் பிரசாரத்தில் மும்முரமாக இருக்கிறது என்று நினைத்து வான் எல்லையை திறந்து விட்டுள்ளது. எனக்கு பிரசாரத்தைவிட நாட்டின் பாதுகாப்புதான் முக்கியம்’ என பேசிய மோடி, மேலும் பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக உரையாற்றி வருகிறார். #PMModi #Chowkidar #MainBhiChowkidar #MainBhiChowkidarprogram
    ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் நவ்காம் மாவட்டத்தில் பாதுகாப்பு படையினருடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில் பாகிஸ்தானை சேர்ந்த இரு பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். #terroristskilled #Soporeencounter #Pakistaniterrorists
    ஸ்ரீநகர்:

    ஜம்மு-காஷ்மீர் மாநிலம், நவ்காம் மாவட்டத்துக்குட்பட்ட சுட்சு கலான் பகுதியில் சில பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பயங்கரவாதிகளை வேட்டையாடும் சிறப்பு பாதுகாப்பு படையினருக்கு தகவல் வந்தது.

    இதையடுத்து, அந்த பகுதியை இன்று காலை பாதுகாப்பு படையினர் சுற்றி வளைத்தனர். அவர்கள் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிகளால் சுட்டு தாக்குதல் நடத்தினர். பாதுகாப்பு படையினரும் எதிர்தாக்குதல் நடத்தினர். சிலமணி நேரம் நீடித்த துப்பாக்கிச் சண்டையில் இன்று மாலை இரு பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

    பயங்கரவாதிகள் பதுங்கி இருந்த இடத்தில் இருந்து வெடிப்பொருட்கள் மற்றும் இந்திய அரசுக்கு எதிரான துண்டு பிரசுரங்கள் கைப்பற்றப்பட்டதாகவும், தொடர்ந்து இருதரப்பினருக்கும் இடையில் மோதல் நீடித்து வருவதாகவும் பாதுகாப்பு படை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    கொல்லப்பட்ட இரு பயங்கரவாதிகள் பாகிஸ்தானை சேர்ந்த அலி மற்றும் இத்ரீஸ் என தெரியவந்துள்ளது. #terroristskilled #Soporeencounter #Pakistaniterrorists 
    பாகிஸ்தான் பயங்கரவாதிகள் இனியும் தாக்குதல் நடத்தினால் இந்தியா கொந்தளித்து விடும் என்று அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது. #PulwamaAttack #DonaldTrump #India #US
    வாஷிங்டன்:

    காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் பயங்கரவாதிகள் கார் குண்டு தாக்குதல் நடத்தியதில் 40 இந்திய துணை ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர்.

    இதற்கு பதிலடியாக இந்திய விமானங்கள் பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதிகள் முகாம்களை குண்டு வீசி அழித்தன. இதனால் இரு நாடுகளுக்கும் இடையே போர் பதட்டம் ஏற்பட்டது.

    அமெரிக்கா உள்ளிட்ட சர்வதேச நாடுகள் தலையீட்டால் சற்று அமைதி ஏற்பட்டுள்ளது.

    இந்த நிலையில் அமெரிக்க வெள்ளை மாளிகை மூத்த அதிகாரி ஒருவர் இது சம்பந்தமாக கூறியிருப்பதாவது:-

    இந்தியா - பாகிஸ்தான் இடையே மோதல் போக்கு உருவானதுமே அதிபர் டொனால்டு டிரம்ப் தலையிட்டு அமைதி நடவடிக்கைகளை மேற்கொண்டார்.

    பாகிஸ்தானில் செயல்படும் பயங்கரவாதிகளை ஒடுக்கும் படியும், அந்த மண்ணை பயங்கரவாதிகள் புகலிடமாக பயன்படுத்துவதை தடுக்கும் படியும் கேட்டுக்கொண்டார்.

    அதன்படி சில நடவடிக்கைகளை பாகிஸ்தான் மேற்கொண்டுள்ளது. சில பயங்கரவாதிகள் கைது, அவர்களது சொத்துக்கள் முடக்கம் போன்றவற்றை பாகிஸ்தான் எடுத்தது.



    ஆனாலும் இந்த நடவடிக்கை போதுமானவை அல்ல. பயங்கரவாதிகள் இயக்க தலைவர்கள் இன்னும் பாகிஸ்தானில் சுதந்திரமாக நடமாடும் நிலை உள்ளது. அதை பாகிஸ்தான் தடுக்க வேண்டும்.

    பாகிஸ்தான் பயங்கரவாதிகள் இனியும் இந்தியாவுக்குள் தாக்குதல் நடத்தினால் இந்தியா கொந்தளித்து விடும். அது பெரிய பிரச்சனையாக மாறிவிடும். அதன் பிறகு அதை கட்டுக்குள் கொண்டு வருவது கடினமாக அமையும்.

    எனவே ஜெய்ஷ்-இ- முகமது, லஷ்கர்- இ- தொய்பா போன்ற பயங்கரவாத இயக்கம் மீது இன்னும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இனியும் தாக்குதல் நடக்காது என்ற உத்தரவாதத்தை பாகிஸ்தான் ஏற்படுத்த வேண்டும்.

    அங்கு என்ன நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்பதை அமெரிக்கா தொடர்ந்து கண்காணித்து வருகிறது. மேலும் இது பற்றி ஆய்வு செய்வோம். பாகிஸ்தானுக்கு அமெரிக்கா தொடர்ந்து அழுத்தத்தை கொடுக்கும். தெற்கு ஆசிய பகுதியில் அமைதி நிலவ வேண்டும் என்பது எங்கள் எண்ணமாகும். அதை நிறைவேற்ற அனைத்து முயற்சிகளும் எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார். #PulwamaAttack #DonaldTrump #India #US
    பாகிஸ்தான் எல்லை தாண்டிய தாக்குதல்களை தடுப்பதுடன், பயங்கரவாதிகளை வளர்ப்பதையும் நிறுத்த வேண்டும் என அமெரிக்கா வலியுறுத்தி உள்ளது. #IndiaPakistanConflict #MikePompeo
    வாஷிங்டன்:

    புல்வாமாவில் பிப்ரவரி 14ம் தேதி நடந்த பயங்கரவாத தாக்குதல் மற்றும் பாகிஸ்தான் பகுதிக்குள் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது இந்தியா நடத்திய தாக்குதலுக்குப் பிறகு இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே பதற்றமான சூழல் நிலவுகிறது. பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கையில் இந்தியாவிற்கு அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளன.

    சமீபத்தில் இந்திய வெளியுறவு செயலாளர் விஜய் கோகலேவை அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜான் போல்டன் சந்தித்தபோது, இந்தியாவிற்கு அமெரிக்காவின் ஆதரவை தெரிவித்தார். பாகிஸ்தான் பயங்கரவாதக் குழுக்களுக்கு எதிராக "உறுதியான மற்றும் மீறமுடியாத நடவடிக்கை" எடுக்க வேண்டும் என்று பாகிஸ்தானிடம் அமெரிக்காவும் இந்தியாவும் கேட்டுக்கொண்டன.

    இந்த நிலையில் அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி மைக் பாம்பியோ அளித்த பேட்டியில் கூறியதாவது:-


    பாகிஸ்தான் பயங்கரவாதிகளால் கடந்த பிப்ரவரி 14 ந்தேதி  இந்தியாவில் என்ன நடந்தது என்பதை நாங்கள் கண்டோம். பாகிஸ்தானில் இருந்து வந்த பயங்கரவாதிகளால் மோதல் ஏற்பட்டது. எனவே இந்த விஷயத்தில் பாகிஸ்தான் நடவடிக்கையை தீவிரப்படுத்த வேண்டும். பயங்கரவாதிகளை  வளர்ப்பதை பாகிஸ்தான் நிறுத்த வேண்டும்.

    டொனால்டு டிரம்ப் நிர்வாகம் பாகிஸ்தானுக்கு எதிராக வேறு எந்த முந்தைய அரசாங்கங்களும் எடுக்காத நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. பாகிஸ்தான் பயங்கரவாதிகளை தடுத்து நிறுத்துவதில் அதிக அக்கறை செலுத்த வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார். #IndiaPakistanConflict #MikePompeo
    பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகளை இந்திய ராணுவம் வேரோடு அழிக்க வேண்டும் என்று புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த சிவச்சந்திரன் மனைவி காந்திமதி கூறியுள்ளார். #PulwamaAttack #SivaChandran #Surgicalstrike2 #IndianAirForce
    அரியலூர்:

    காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் கடந்த 14-ந்தேதி பயங்கரவாதிகள் நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் சி.ஆர்.பி.எப். வீரர்கள் 40 பேர் பலியாகினர். இதில் தமிழகத்தில் தூத்துக்குடியை சேர்ந்த சுப்பிரமணியன், அரியலூர் மாவட்டம் கார்குடி கிராமத்தை சேர்ந்த சிவச்சந்திரன் ஆகியோரும் பலியானார்கள்.

    இருவரின் உடல்களும் கடந்த 16-ந்தேதி அவர்களது சொந்த ஊரில் ராணுவ மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது. பொது மக்கள் ஏராளமானோர் திரண்டு அஞ்சலி செலுத்தினர். அப்போது அங்கு திரண்டு நின்ற இளைஞர்கள் பாகிஸ்தானுக்கு தக்க பதிலடி கொடுக்க வேண்டும் என்று கோ‌ஷங்கள் எழுப்பியதோடு, அஞ்சலி நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனிடமும் வலியுறுத்தினர்.

    இதேபோல் சிவச்சந்திரன் உருவப்படத்திற்கு அஞ்சலி செலுத்திய மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணனும், பாகிஸ்தானுக்கு உரிய நேரத்தில் பதிலடி கொடுக்கப்படும் என்று உறுதி அளித்திருந்தார்.

    மேலும் பலியான சிவச்சந்திரனின் மனைவி காந்திமதியும் பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுக்க வேண்டும் என்றார். இந்த நிலையில் இன்று அதிகாலையில் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் முகாமிட்டு இருந்த பயங்காரவாதிகளின் முகாம்கள் மீது இந்திய விமானப்படை விமானங்கள் குண்டு வீசி அதிரடி தாக்குதல் நடத்தின. இதில் பயங்கரவாதிகள் பலர் கொல்லப்பட்டுள்ளனர்.

    திறமையுடன் செயல்பட்ட இந்திய விமானப்படை வீரர்களுக்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளன. இந்த தாக்குதல் குறித்து சிவச்சந்திரனின் மனைவி காந்திமதி நிருபர்களிடம் கூறியதாவது:-



    பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகளை இந்திய ராணுவம் வேரோடு அழிக்க வேண்டும். பயங்கரவாதிகளால் பாதிக்கப்பட்டு உயிரிழக்கும் ராணுவ வீரர்களின் குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது.

    பெண்கள் தங்களது கணவர்களை இழந்து தவிக்கிறார்கள். குழந்தைகள் அப்பா என்று அழைக்க முடியாத சூழ்நிலைக்கு தள்ளப்படுகிறார்கள். எனவே பயங்கரவாதிகளை இந்திய ராணுவத்தினர் வேரோடு அழிக்க வேண்டும். தற்போது நடந்துள்ள இந்திய ராணுவத்தின் அதிரடி தாக்குதல் சற்றே ஆறுதல் அளித்துள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார். #PulwamaAttack #SivaChandran #Surgicalstrike2 #IndianAirForce
    கைபர் பக்துங்வா மாகாணத்தில் உள்ள தெற்கு வஜீரிஸ்தான் மாவட்டத்தின் மலைப்பகுதியில் பதுங்கி இருந்த 3 பயங்கரவாதிகள் பாகிஸ்தான் ராணுவ படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
    இஸ்லாமாபாத் :

    ஆப்கானிஸ்தானில் ஆதிக்கம் செலுத்தி வரும் தலீபான் பயங்கரவாதிகள் அண்டை நாடான பாகிஸ்தானிலும் காலூன்றி தாக்குதல் நடத்தி வருகிறார்கள். அவர்களுக்கு பாகிஸ்தான் ராணுவம் தக்க பதிலடி கொடுத்து வருகிறது.

    இந்த நிலையில் கைபர் பக்துங்வா மாகாணத்தில் உள்ள தெற்கு வஜீரிஸ்தான் மாவட்டத்தின் மலைப்பகுதியில் தலீபான் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக ராணுவத்தினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    அதன்பேரில் அங்கு அதிரடி தேடுதல் வேட்டையில் ஈடுபட்டபோது ராணுவ வீரர்களை நோக்கி, பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சுட்டனர். அதனை தொடர்ந்து ராணுவ வீரர்கள் பதில் தாக்குதல் நடத்தினர். இதில் பயங்கரவாதிகள் 3 பேரும் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
    உத்தரபிரதேச மாநிலத்தில் கும்பமேளா நடக்கும் நாட்களில், கூட்டத்தோடு கூட்டமாக ஊடுருவி மிகப்பெரிய நாசவேலை செய்ய பாகிஸ்தான் பயங்கரவாதிகள் சதி திட்டம் தீட்டி இருப்பது தெரிய வந்துள்ளது. #KumbhMela
    லக்னோ:

    உத்தரபிரதேச மாநிலம் அலகாபாத்தில் கங்கை, யமுனா, கண்ணுக்குத் தெரியாத சரஸ்வதி ஆகிய 3 நதிகள் ஒன்று கூடும் திரிவேணி சங்கமத்தில் கும்பமேளா நடைபெற உள்ளது.

    வருகிற 14-ந்தேதி இந்த கும்பமேளா தொடங்க உள்ளது. 6 ஆண்டுகளுக்கு ஒரு தடவை நடத்தப்படும் கும்பமேளா என்பதால், இந்த கும்பமேளாவுக்கு சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    கும்பமேளா நடைபெறும் நாட்களில் நாடு முழுவதிலும் இருந்து சுமார் 15 கோடி பேர் கலந்து கொண்டு புனித நீராடுவார்கள் என்று கணிக்கப்பட்டுள்ளது. தினமும் ரெயில்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள்.

    இதையொட்டி அலகாபாத் ரெயில் நிலையம் ஒரே நேரத்தில் 10 ஆயிரம் பேரை கையாளும் வகையில் மேம்படுத்தப்பட்டுள்ளது. மற்ற ரெயில் நிலையங்களிலும் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    இந்த நிலையில் கும்பமேளா நடக்கும் நாட்களில், கூட்டத்தோடு கூட்டமாக ஊடுருவி மிகப்பெரிய நாசவேலை செய்ய பாகிஸ்தான் பயங்கரவாதிகள் சதி திட்டம் தீட்டி இருப்பது தெரிய வந்துள்ளது. உளவுத்துறையினர் கொடுத்த தகவலின் பேரில் இந்த எச்சரிக்கையை வட கிழக்கு ரெயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ளது.

    இதைத் தொடர்ந்து உத்தரபிரதேசம், பீகார் ஆகிய இரு மாநிலங்களிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கும்பமேளா நடக்கும் அலகாபாத் நகரம் பலத்த பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. தீவிர வாகன சோதனை நடந்து வருகிறது.

    உத்தரபிரதேசத்தில் பிரயக்ராஜ் (அலகாபாத்) தியோரியா, கோரக்பூர், பல்லியா, காசிப்பூர், மா, வாரணாசி, மிர்காபூர், பதோதி, ஜனுன்பூர், அசம்கர், குஷிநகர், மகராஜ்கஞ்ச் ஆகிய 13 மாவட்டங்கள் உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. பீகாரில் சப்ரா, சிவான், கோபால்கஞ்ச் ஆகிய மூன்று மாவட்டங்கள் உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

    ரெயில்களில் வரும் அனைவரையும் சோதனை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. கும்பமேளா பகுதியில் கண்காணிப்பு அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. பயங்கரவாத தடுப்புப் பிரிவு போலீசார் இப்போதே சாதாரண உடைகளில் கண்காணிப்பை தீவிரப்படுத்தி உள்ளனர். #KumbhMela
    பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகளுக்கு இந்தியாவில் கடல்வழியாக ஊடுருவி தாக்குதல் நடத்த தொடர்ந்து பயிற்சி அளிக்கப்பட்டு வருவதாக மத்திய உள்துறை இணை மந்திரி தெரிவித்தார். #Parliament
    புதுடெல்லி:

    மும்பையில் பயங்கரவாதிகள் கடல் வழியாக ஊடுருவி தாக்குதலை நடத்தியதில் பலர் உயிரிழந்தனர்.

    இந்த நிலையில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் மீண்டும் கடல் வழியாக ஊடுருவி இந்தியாவில் தாக்குதல் நடத்த திட்டமிட்டு உள்ளதாக மத்திய உள்துறை இணை மந்திரி ஹன்ஸ்ராஜ் பாராளுமன்றத்தில் ஒரு கேள்விக்கு பதில் அளித்த போது கூறினார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகளுக்கு இந்தியாவில் கடல்வழியாக ஊடுருவி தாக்குதல் நடத்த தொடர்ந்து பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. அதை தடுக்க தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறோம்.

    கடல் வழியாக ஊடுருவி தாக்குதல் நடத்த முடியவில்லை என்றால் துறைமுகம், கப்பல்கள், ஆயில் டேங்குகளை தாக்க திட்டமிட்டு இருக்கிறார்கள். அதையும் தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு பலத்த பாதுகாப்பு போடப்பட்டு இருக்கிறது.

    இவ்வாறு அவர் கூறினார். #Parliament
    பாகிஸ்தானில் 12 பள்ளிகளுக்கு பயங்கரவாதிகள் தீ வைத்து பெருமளவில் சேதத்தை ஏற்படுத்தியதைக் கண்டித்து பொதுமக்கள் போராட்டம் நடத்தினர். #PakistanSchools #SchoolsBurntDown #GilgitBaltistan
    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தான் கட்டுப்பாட்டில் உள்ள காஷ்மீர் பகுதியிலுள்ள கில்கிட்-பல்டிஸ்தான் பகுதியில் தொடர்ந்து வன்முறை தலைவிரித்தாடுகிறது. பயங்கரவாதிகள் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளனர். கல்வி நிலையங்களை குறிவைத்து பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

    இந்நிலையில் கில்கிட்-பல்டிஸ்தான் பகுதிக்குட்பட்ட சிலாஸ் நகரில் உள்ள 12 பள்ளிகளுக்கு நேற்று இரவு பயங்கரவாதிகள் தீ வைத்தனர். இதில் பல லட்சம் மதிப்புள்ள பொருட்கள் தீக்கிரையாகின. தீ வைக்கப்பட்ட பள்ளிகளில் பாதி பள்ளிகள் பெண்கள் மட்டுமே படிக்கும் பள்ளிகள் ஆகும்.



    தாக்குதல் நடத்தியவர்களை கைது செய்ய வலியுறுத்தியும், பள்ளிகளுக்கு போதிய பாதுகாப்பு வழங்கக்கோரியும் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    தீ வைத்த பயங்கரவாதிகளை பாதுகாப்பு படையினர் தீவிரமாகத் தேடி வருகின்றனர். பாதுகாப்புக்காக கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இந்த தாக்குதலுக்கு எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. #PakistanSchools #SchoolsBurntDown #GilgitBaltistan
    ×